உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவனத்தில் சம்வித் குருகுலம் மகளிர் ராணுவப் பள்ளியைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஜனவரி 01, 2024 அன்று திறந்து வைத்தார்.
அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் / தனியார் / மாநில அரசுப் பள்ளிகளுடன் இணைந்து 100 புதிய ராணுவப் பள்ளிகளை நிறுவும் முயற்சியின் கீழ் சுமார் 870 மாணவர்களுடன் முதலாவது அனைத்து மகளிர் ராணுவப் பள்ளி திறக்கப்பட்டுள்ளது.
0 Comments