கோவாவில் நடைபெற்ற சர்வதேச ஊதா விழாவின் நிறைவு நாளில், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, தேசிய மனிதவள மேம்பாட்டுக் கட்டமைப்பு ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒத்துழைப்பு, பிஎம்-தக்ஷ்த் எனும் பிரதமரின் ஆற்றல் மற்றும் திறன் பயனாளி-மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தல் துறை இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இத்துறையின் மக்கள் தொடர்பை விரிவுபடுத்துவதற்கும், நாடு தழுவிய அளவில் மனிதவள நிபுணர்களுடனான தொடர்புகளை வளர்ப்பதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த வேலை வாய்ப்புகளை எளிதாக்குவதற்கான முயற்சிகளை அதிகரிப்பதும், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பலவகைத் தொழிலாளர்களை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.
0 Comments