நித்தி ஆயோக் முன்னாள் தலைவர் திரு அரவிந்த் பனகாரியாவை தலைவராகக் கொண்டு 31.12.2023 அன்று பதினாறாவது நிதிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் இக்குழுவின் உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- திரு. அஜய் நாராயண் ஜா, 15-வது நிதிக்குழு முன்னாள் உறுப்பினர் மற்றும் செலவினத்துறை முன்னாள் செயலாளர் - முழுநேர உறுப்பினர்
- திருமதி அன்னி ஜார்ஜ் மேத்யூ, செலவினத்துறை முன்னாள் சிறப்புச் செயலாளர் - முழுநேர உறுப்பினர்
- டாக்டர் நிரஞ்சன் ரஜதியக்ஷ, நிர்வாக இயக்குநர், அர்தா குளோபல் - முழுநேர உறுப்பினர்
- டாக்டர் செளமியா காந்தி கோஷ், குழுமத் தலைமைப் பொருளாதார ஆலோசகர், பாரத ஸ்டேட் வங்கி - பகுதிநேர உறுப்பினர்
குழுவின் பரிந்துரை விதிமுறைகள் 31.12.2023 அன்று அறிவிக்கப்பட்டன. 2026, ஏப்ரல் 1 அன்று தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்கான பரிந்துரைகளை 2025 அக்டோபர் 31-க்குள் அளிக்குமாறு 16-வது நிதிக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments