டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 1,64,883 கோடி ரூபாய் ஆக உள்ளது. இதில் சிஜிஎஸ்டி மூலம் ரூ.30,443 கோடியும், எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ.37,935 கோடியும், ஐஜிஎஸ்டி மூலம் ரூ.84,255 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.41,534 கோடியும் சேர்த்து), செஸ் வரி மூலம் ரூ.12,249 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.1,079 கோடியும் சேர்த்து) அடங்கும்.
2023 டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ஆனது, கடந்த 2022 டிசம்பர் மாதம் வசூல் ஆன தொகையை விட 10.3 சதவீதம் அதிகம் ஆகும். 7வது முறை 2023- 24 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை, 7வது முறையாக தாண்டியுள்ளது.
0 Comments