ரிசர்வ் வங்கியின் ஜனவரி மாத அறிக்கையில், துணை ஆளுநர் மைக்கேல் தேபப்ரதா பத்ரா தலைமையிலான குழு 'பொருளாதாரத்தின் நிலை' என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில், 'உலக பொருளாதாரம் மாறுபட்ட வளர்ச்சியை எதிர்கொள்ளும் நிலையில், நுகர்வு கட்டத்தில் இருந்து முதலீட்டிற்கு மாறிக் கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரம் 2023-24ல் எதிர்பார்ப்பதை விட வலுவான வளர்ச்சியை பதிவு செய்யும்.
அரசின் மூலதனச் செலவுகள் தனியார் முதலீட்டில் குவியத் தொடங்கி உள்ளன. அடுத்த நிதியாண்டிலும் வலுவான பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை இந்தியா தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில், ஜிடிபியில் குறைந்தது 7 சதவீத வளர்ச்சியைப் பெற வேண்டும்.
0 Comments