இந்திய கடற்படை மற்றும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் இணைந்து உள்நாட்டில் தயாரித்த சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை, இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சோதனையை இன்று வெற்றிகரமாக மேற்கொண்டது.
ஏவுகணை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கப்பல்களில் இருந்து இந்த சோதனையானது நடத்தப்பட்டிருக்கிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்திய கடற்படை, பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை சோதனையை சுகோய் போர் விமானத்தில் இருந்து மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments