மகாராஷ்டிரத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவா ஷேவா அடல் சேது எனப் பெயரிடப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய கடல் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது இந்தியாவில் கட்டப்பட்ட மிக நீளமான கடல் பாலமாகும். கடந்த 2016 டிசம்பரில் பிரதமர் மோடியால் பாலத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது. கடல் பாலம் மொத்தம் ரூ.17,840 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த பாலத்தின் மொத்த நீளம் 22 கி.மீ. இதில் கடலுக்கு நடுவே 16.5 கி.மீ தொலைவிற்கு பாலம் அமைந்துள்ளது.
இப்பாலம் மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான பயணத்தை வழங்கும். மேலும், இப்பாலம் மும்பையிலிருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கான பயண நேரத்தை குறைக்கும்.
0 Comments