மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (ஐஆர்இடிஏ), அதன் ஊழல் கண்காணிப்புத் துறையின் 'பஹல்' என்ற அறிவார்ந்த இதழை வெளியிட்டுள்ளது.
இந்த இதழை ஐஆர்இடிஏ- வின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு பிரதீப் குமார் தாஸ் ஜனவரி 25, 2024 அன்று வெளியிட்டார். புதுதில்லியில் உள்ள ஐ.ஆர்.இ.டி.ஏ.வின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி திரு அஜய் குமார் சஹானி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த முன்முயற்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளை ஊக்குவிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.
0 Comments