TAMIL
கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் (ஆர்.இ.சி நிறுவனம்) அடுத்த 5 ஆண்டுகளில், ஆர்.வி.என்.எல் நிறுவனம் செயல்படுத்தவுள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.35,000 கோடி வரை நிதியளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் பன்னோக்கு போக்குவரத்துத் திட்டங்கள், ரயில் உள்கட்டமைப்பு திட்டங்கள், சாலை, துறைமுகம் மற்றும் ஆர்.வி.என்.எல் தொடர்புடைய மெட்ரோ திட்டங்களை உள்ளடக்கியது.
கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தின் (ஆர்.இ.சி.) நிதிப்பிரிவு இயக்குநர் திரு அஜய் சவுத்ரி மற்றும் ஆர்.வி.என்.எல் நிறுவனத்தின் செயல்பாடுகள் பிரிவு இயக்குநர் திரு ராஜேஷ் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ENGLISH
The Rural Electrification Corporation (REC) has signed an MoU to fund up to Rs 35,000 crore for infrastructure projects to be implemented by RVNL over the next 5 years. These projects include multi-modal transport projects, rail infrastructure projects, road, port and RVNL related metro projects.
The MoU was signed in the presence of Rural Electrification Corporation (REC) Finance Division Director Mr. Ajay Chowdhury and RVNL Operations Division Director Mr. Rajesh Prasad.
0 Comments