திரு சத்னம் சிங் சாந்துவை இன்று மாநிலங்களவை உறுப்பினராகக் குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். ஒரு விவசாயியின் மகனான சத்னம் சிங் சாந்து இந்தியாவின் முன்னணிக் கல்வியாளர்களில் ஒருவர்.
கல்வியை அடையப் போராடிய சாந்து, 2001-ம் ஆண்டில் மொஹாலியில் உள்ள லாண்ட்ரானில் சண்டிகர் குழுமக் கல்லூரிகளுக்கு (சி.ஜி.சி) முதலில் அடித்தளம் அமைத்ததன் மூலம் உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்தை உருவாக்குவதைத் தனது வாழ்க்கையின் குறிக்கோளாக மாற்றினார். இந்த நிறுவனம் க்யூஎஸ் உலகத் தரவரிசை 2023-ல் இடம் பிடித்தது.
ஆசியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் முதன்மையானது. ஆரம்ப வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொண்ட சண்டிகர் பல்கலைக்கழக வேந்தர் சாந்து, ஓர் உறுதியான கொடையாளராக மாறியதைக் காணமுடிந்தது. தரமான கல்வியைத் தொடர லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அவர் நிதி உதவி வழங்கியுள்ளார்.
'இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளை' மற்றும் புதிய இந்தியா வளர்ச்சி (என்ஐடி) அறக்கட்டளை ஆகிய இரண்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், வகுப்புவாத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் பெரிய அளவிலான சமூக முயற்சிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
உள்நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டுக்கான தனது முயற்சிகளால் அவர் ஓர் அடையாளத்தை உருவாக்கியுள்ளார் மற்றும் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த மக்களுடன் விரிவாகப் பணியாற்றியுள்ளார்.
0 Comments