இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்துவந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், திடீரென அதில் இருந்து விலகி, மீண்டும் பாஜக உடன் கைகோர்த்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிதீஷ் குமார், அதைத் தொடர்ந்து பிகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து, பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார்.
இந்நிலையில் இன்று (ஜன.28) மாலையில் பிகார் மாநில முதல்வராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டுள்ளார். நிதீஷ் குமாரைத் தொடர்ந்து 8 பேர் மாநில அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
0 Comments