Recent Post

6/recent/ticker-posts

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி / Prime Minister Modi inaugurated the new terminal of Trichy Airport

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி / Prime Minister Modi inaugurated the new terminal of Trichy Airport

திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பான நிகழ்ச்சியில், புதிய முனையத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1200 கோடியில் புதிய முனையம் அமைக்கும் பணியை கடந்த 2019-ஆண்டு பிப். 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார். 

இப்பணிகள் 2021-ஆவது ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முடித்து புதிய முனையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர விமானநிலைய ஆணையக் குழுமம் திட்டமிட்டிருந்தது.

ஆனால், கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் முற்றுப்பெறாத நிலையில் 2021, 22, 23 ஆகிய மூன்றாண்டுகளும் தள்ளிப்போயின. 

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel