தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த உடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன்னதாக கடந்த 1989- 91 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும், 1996-2001 திமுக ஆட்சிக்காலத்தில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராகவும் பதவி வகித்துள்ள இவர், திமுக எம்பியாகவும் பதவி வகித்துள்ளார்.
இந்த நிலையில், வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தானாகவே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞரான பி.எஸ்.ராமனை நியமிக்க அரசு முடிவு செய்தது.
இதற்கான பரிந்துரை ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு அரசு தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் பொறுப்பேற்க உள்ளார்.
தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் அவருக்கு சவாலாக காத்திருக்கிறது. இவர் கடந்த 2006 - 2011 காலகட்டத்தில் திமுக அரசால் தலைமை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டு பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments