மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான ஊரகப் பகுதி மின்மயமாக்கல் ஆணையம் (ஆர்.இ.சி), சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான நிதி குறித்து விவாதிக்க அனைத்து முக்கியப் பங்குதாரர்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் வகையில், மாநாடு ஒன்றை நடத்தியுள்ளது.
புதுதில்லியில் நேற்று (ஜனவரி-8) நடைபெற்ற இந்த மாநாட்டில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்திய சாலைகள் காங்கிரஸ், தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்போர் கூட்டமைப்பு, மாநில சாலை மேம்பாட்டு அமைப்புகள், தொழில்துறை கொள்கை வகுப்போர், சாலை மற்றும் கட்டுமான அமைப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த முக்கிய பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் போது, திலீப் பில்ட்கான் லிமிடெட், ஜிஎம்ஆர் பவர் & அர்பன் இன்ஃப்ரா, சிடிஎஸ் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் லிமிடெட் மற்றும் டிபி ஜெயின் & கோ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுடன் ரூ.16,000 கோடி மதிப்புள்ள நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
0 Comments