எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சோனம் மஸ்கர் 252.1 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். சோனம் மஸ்கர் பங்கேற்கும் முதல் உலகக் கோப்பை தொடர் இதுவாகும்.
அறிமுக உலகக் கோப்பையிலேயே வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள சோனம் மஸ்கர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஜெர்மனியின் அனா ஜான்சன் 253 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், போலந்தின் அனெட்டா ஸ்டாங்கிவிச் 230.4 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
0 Comments