Recent Post

6/recent/ticker-posts

எஸ்எஸ்பி-யின் புதிய தலைவராக தல்ஜித் சிங் நியமனம் / Taljit Singh appointed as new head of SSB


எஸ்எஸ்பி-யின் புதிய தலைவராக தல்ஜித் சிங் நியமனம் / Taljit Singh appointed as new head of SSB


மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவ அமைப்பான சாஸ்த்ரா சீமா பால் அமைப்பிற்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1990 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான தல்ஜித் சிங் சௌதரி செவ்வாய்க்கிழமை எஸ்எஸ்பி எனப்படும் சாஸ்த்ரா சீமா பால் அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றார். 

மத்திய ரிசர்வ் காவல் படையின் தலைவரும், எஸ்எஸ்பி அமைப்பின் தற்காலிக தலைவருமான அனீஷ் தயாள் சிங் இப்பொறுப்பை தல்ஜித் சிங் சௌதரியிடம் ஒப்படைத்தார்.

புதுதில்லியில் உள்ள சாஸ்த்ரா சீமா பால் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்பு நிகழ்வு நடைபெற்றது. தல்ஜித் சிங் சௌதரி 2025 நவம்பர் மாதம் வரை இப்பதவியை வகிக்க உள்ளார்.

முன்னதாக, எஸ்எஸ்பி தலைவராக சௌதரியை நியமனம் செய்யக்கோரிய மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கு, அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து இதற்கான உத்தரவு ஜன.19ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. 

மத்திய ராணுவ அமைப்புகளில் ஒன்றான சாஸ்த்ரா சீமா பால் அமைப்பு நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் எல்லையைப் பாதுகாப்பதற்கு பொறுப்பான அமைப்பாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel