பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அயோத்தி விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மாற்றி, மகரிஷி வால்மீகி சர்வதேச விமானநிலையம், அயோத்திதாம் என்று அறிவிப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருவதற்கு வழிவகை செய்யும் வகையிலும், முதன்மையான அயோத்தியின் பொருளாதார வளத்தை உணர்ந்தும், சர்வதேச ஆன்மீகத் தலம் என்ற அதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டும் அயோத்தி விமானநிலையம் சர்வதேச அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்படுகிறது.
ராமாயண காவியத்தை இயற்றிய மகரிஷி வால்மீகிக்கு புகழ்சேர்க்கும் வகையிலும், விமானநிலையத்தின் அடையாளத்துக்கு கலாசாரப் புகழ் அளிக்கும் வகையிலும் இந்த விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமானநிலையம், அயோத்திதாம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
0 Comments