மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), பொது சுகாதாரம் அமைச்சகத்தின் மருத்துவம், உணவுகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அமைப்புகளுக்கான தலைமை இயக்குநரகம் ஆகியவற்றுக்கும், டொமினிகன் குடியரசின் சுகாதார அமைச்சகத்தின் உணவு மற்றும் தூய்மைப் பொருட்கள் அமைப்பிற்கும் இடையே மேற்கொளள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறை துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2023 அக்டோபர் 04 அன்று கையெழுத்தானது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், மருத்துவப் பொருட்கள் தொடர்பான துறைகளில் தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும். சம்பந்தப்பட்ட தரப்பினரின் அதிகார வரம்பிற்குள் தொடர்புடைய நிர்வாக மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்ககளிலும் இது ஒத்துழைப்பை மேம்படுத்தும்.
சர்வதேச சந்தைகளில் தரமற்ற, போலியான மருந்துகளின் புழக்கத்தை தடுப்பதில் இணைந்து செயல்படுவதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
0 Comments