பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசின் சுகாதாரம், குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, நெதர்லாந்து சுகாதார நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இடையே மருந்துகள் மதிப்பீட்டு வாரியம், சுகாதாரம் மற்றும் இளைஞர் நல கண்காணிப்பகம், மனித ஆராய்ச்சி தொடர்புடைய மத்திய குழு சார்பில் "மருந்து தயாரிப்புகள் ஒழுங்குமுறை துறையில் ஒத்துழைப்புக்காக 2023 நவம்பர் 7 அன்று மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இரு நாடுகளின் ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், மருந்து பயன்பாட்டிற்கான மூலப்பொருட்கள், உயிரியல் பொருட்கள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட மருந்துகள் தொடர்பான மருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறைகளை நன்கு புரிந்துகொள்ள உதவும்.
0 Comments