இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கான செயற்கைக்கோளை வடிவமைத்து, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் உதவியுடன், விண்ணில் நிலைநிறுத்துகிறது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - சி58 ராக்கெட், 469 கிலோ எடை உடைய, 'எக்ஸ்போசாட்' செயற்கைக்கோளை சுமந்தபடி, ஜனவரி 1ம் தேதி காலை, 9:10 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
பூமியில் இருந்து புறப்பட்ட, 22வது நிமிடத்தில் ராக்கெட் திட்டமிடப்பட்ட, 650 கி.மீ., துாரம் உள்ள புவி வட்ட பாதையில், எக்ஸ்போசாட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
பின், 'ஆப்' செய்யப்பட்ட ராக்கெட் இன்ஜின் மீண்டும் இயக்கப்பட்டு, 350 கி.மீ., தொலைவுக்கு கீழே எடுத்து வரப்பட்டு, 10 ஆய்வு கருவிகளை உடைய சிறிய செயற்கைக்கோள், அந்த பாதையில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஜன.,1ம் தேதி இஸ்ரோ அனுப்பிய எக்ஸ்போ சாட் செயற்கைக்கோள் விண்மீன் வெடிப்பு குறித்த தரவுகளை சேகரித்து உள்ளது.
சூரிய குடும்பத்திற்கு வெளியே விண்மீன் வெடிப்பு குறித்த தரவுகளை இஸ்ரோ முதல் முறையாக சேகரித்துள்ளது. தரவுகள் படி, கால்சியம், சல்பர், மெக்னீசியம், சிலிக்கான், ஆர்கான், நியான், இரும்பு ஆகியவை இருப்பது தெரியவந்துள்ளது.
0 Comments