இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகள் இணைந்து வறுமை ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுத்து, கடந்த 2004-ஆம் ஆண்டு உருவாக்கிய ஐ.பி.எஸ்ஏ நிதிக் குழுவிற்கு இந்தியா 1 மில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா( ஐ.பி.எஸ்ஏ) இணைந்து உருவாக்கிய நிதிக் குழுவிற்கு மூன்று நாடுகளும், ஆண்டுதோறும் தலா 1 மில்லியன் டாலர்கள் நிதியுதவி அளித்து வருகின்றன.
இந்த நிதியுதவி மூலம் ஆப்பிரிக்கா உள்ளடங்கிய 37 நாடுகளில், சுத்தமான குடிநீர், உணவுப் பாதுகாப்பு, எய்ட்ஸ் நோய் பரவல் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கான இந்தியாவின் பங்களிப்பாக இதுவரை 18 மில்லியன் டாலர்கள் நிதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments