சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் 8 ஆயிரத்து 801 கோடியே 93 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளையும், ஆயிரத்து 615 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் 7 ஆயிரத்து 300 கோடிக்கு மேல் நிறுவப்பட்டுள்ள 20 புதிய துணை மின் நிலையங்களில் மேம்பாட்டுத் திட்டங்களை திறந்து வைத்தார்.
அத்துடன், தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் 111 கோடியே 35 லட்சம் மதிப்பில் பாசன கட்டமைப்புகள் மற்றும் திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் 414 கோடியில் நீரொழுங்கி திறக்கப்பட உள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சென்ட்ரல் அருகே ஈவினிங் பஜார் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு குறுக்கே 9 கோடியே 75 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது சுரங்க நடைப்பாதை உட்பட பல்வேறு இடங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும், நீர்வளத்துறை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட துறைகளின் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
0 Comments