அசாம் கவுகாத்தியில் ரூ.11,600 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்தார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி சில திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
புனித தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும் ’மா காமாக்ய திவ்யா பரியோஜனா’ திட்டத்திற்கும், வடகிழக்குப் பிராந்தியத்தின் விளையாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
மேலும், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, ரூ.3,250 கோடி செலவில் கட்டப்படவுள்ள கௌஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஒருங்கிணைந்த புதிய கட்டிடத்துக்கு பிரதமர் மோடி (பிப்.4) அடிக்கல் நாட்டினார்.
0 Comments