உத்தரப் பிரதேசம் வாராணசியில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்தத் திட்டங்களில் பல சாலைகள், சமையல் எரிவாயு பாட்டில் ஆலை, பால் பதப்படுத்தும் அலகு, நெசவாளர்களுக்கான பட்டுத்துணி அச்சிடுவதற்கான பொது வசதி மையம் ஆகியவை அடங்கும்.
இதோடு, வாராணசியில் ஜவுளித் துறைக்காக தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கழகத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் தேசிய முதியோர் மையத்தையும் மோடி அடிக்கல் நாட்டினார்.
குரு ரவிதாஸின் சிலையைத் திறந்துவைத்த பிரதமர் மோடி, அவரது பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்றார். ரவிதாஸ் அருங்காட்சியகத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சன்சத் சமஸ்கிருத பிரதியோகிதா வெற்றியாளர்களுடன் அவர் உரையாடினார்.
0 Comments