Recent Post

6/recent/ticker-posts

வேளாண் பட்ஜெட் 2024 - 2025 / TAMILNADU AGRICULTURE BUDGET 2024 - 2025

வேளாண் பட்ஜெட் 2024 - 2025 / TAMILNADU AGRICULTURE BUDGET 2024 - 2025

வேளாண் துறைக்கான பட்ஜெட்டை பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது திமுக அரசின் 4-வது வேளாண் பட்ஜெட் வேளாண் துறை சார்பில் 80 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் எம். ஆர் கே பன்னீர் செல்வம். 1 மணி நேரம் 57 நிமிடங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கை வாசித்து நிறைவு செய்தார்.

காவிரி டெல்டா பகுதிகளில் 5,333 கி.மீ ஆறு, கால்வாய், வாய்க்கால்களை தூர்வார ரூ.110 கோடி நிதி; தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக 919 பணிகள் மேற்கொள்ளப்படும்.

3 இடங்களில் வேளாண் கண்காட்சிகள் நடத்த ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு

சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, புவனகிரி மிதி பாகற்காய் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை 

ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சி திட்டம் மூலம் முந்திரி சாகுபடியை உயர்த்த ரூ.2.36 கோடி நிதி ஒதுக்கீடு

விவசாயிகள் 75 ஆயிரம் மீட்டத்திற்கு சூரிய சக்தி மின்வேலிகள் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு 

சர்க்கரை ஆலை செயல் திறனை மேம்படுத்த ரூ.12.4 கோடி நிதி ஒதுக்கீடு; பெரம்பலூர், செய்யூர், வேலூர், சேலம் சர்க்கரை ஆலை அரவை பகுதியை தானியங்கியமயமாக்க ரூ.3.6 கோடி

7 லட்சம் தரமான சென்னை நாற்றுகளை வழங்க ரூ.4.80 கோடி நிதி ஒதுக்கீடு; தென்னந்தோப்பில் ஊடுபயிர் பயிரிட ரூ.5.70 கோடி நிதி ஒதுக்கீடு; தென்னை செயல் விளக்க திடல் அமைத்து உற்பத்தியை அதிகரிக்க ரூ.12.5 கோடி நிதி ஒதுக்கீடு

நெற் பயிருக்கு மாற்றாக குறைந்த நீர் தேவையுடைய மாற்று பயிர்களை சாகுபடி செய்திட ரூ.12 கோடி மானியம்; 100 பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கிட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு

முன்னெப்போதும் இல்லாத அளவில் கரும்பு ஒரு டன்னுக்கு ரூ,215 சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கப்படும்; புதிய கரும்பு ரக விதைகளை வழங்கிட ரூ.7.92 கோடி நிதி ஒதுக்கீடு

பயிர் உற்பத்தி திறன் மற்றும் ஊக்குவித்தல் திட்டத்திற்கு ரூ. 48 கோடி நிதி; பயிர் காப்பீட்டு திட்டம் ரூ.1,775 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்

விதை கிராமத்திட்டத்தின் கீழ் நெல் பயறு வகைகளை 50 - 60% மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க ரூ.35 கோடி ஒதுக்கீடு; 50,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் பயிர்களுக்கு ஜிப்சம் வழங்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு

சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு

சூரிய காந்தி சாகுபடியை 12,500 ஏக்கரில் விரிவாக்கும் திட்டத்திற்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு

வேளாண் காடுகள் திட்டத்தில் மரக்கன்றுகள் உற்பத்தி மற்றும் நடவுக்கு ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு

உயிர்மை இடுபொருள் தயாரிப்பு மையம் 100 குழுக்களுக்கு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

விதைப்பு முதல் நேரடி சந்தைப்படுத்துதல் வரை விவசாயிகளுக்கு உதவ ரூ.27 கோடி ஒதுக்கீடு; பயறு பெருக்க திட்டத்தை 4.75 லட்சம் ஏக்கரில் செயல்படுத்திட ரூ.40.27 கோடி ஒதுக்கீடு 

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு; கன்னியாகுமரியில் தேன் பொருட்களுக்கு பரிசோதனை கூடம் அமைத்து பயிற்சி வழங்க ரூ.3.60 கோடி ஒதுக்கீடு

2 லட்சம் விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்கள் வழங்க ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு; 10 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு 5 லட்சம் லிட்டர் திரவ உயிர் உரங்கள் வழங்கப்படும்; ஆடாதொடா, நொச்சி போன்ற தாவரங்களை தரிசு நிலங்களில் பயிரிட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
div style="text-align: justify;">
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 10,000 விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

2020-2021ம் ஆண்டில் 89 லட்சத்து 6000 ஏக்கராக இருந்த பாசனம் பெற்ற பயிர் பரப்பு, 2022-2023ஆம் ஆண்டில் 95 இலட்சத்து 39 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது

உள்ளாட்சி கட்டுப்பாட்டில் உள்ள 4,773 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன; தமிழகத்தின் சாகுபடி பரப்பளவு 2022 - 23-இல் 155 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது

வேளாண் பட்ஜெட் உழவர்களை வளர்ச்சிக்கு அழைத்து செல்லும் என நம்புகிறேன்

25 லட்சம் விவசாயிகளுக்கு இதுவரை ரூ.4,436 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது

கடந்த 2 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் பாசன மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் 50,000 பாசன மின் இணைப்புகள் வழங்கப்படும் 

ஆடாதொடா நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்த்திட 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.

புதிய பலா இரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு.

புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 லட்சம் ஒதுக்கீடு.

ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.

உதகை ரோஜா பூங்காவில் 100 புதிய ரோஜா வகைகள் நடவு செய்யப்படும்.

விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

தென்காசி மாவட்டம் நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைக்கப்படும்.

ஈரோடு கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு "சி" "டி" பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

பண்ருட்டியில் பலா மதிப்பு கூட்டு மையம் ரூ.16.3 கோடியில் அமைக்கப்படும்.

கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க 16,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட்டி மானியத்துக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொல்லிமலை மிளகு, புவனகிரி மிதிபாகற்காய், ஐயம்பாளையம் நெட்டை தென்னை, கண்வலிக்கிழங்கு விதைகள், சத்தியமங்கலம் செவ்வாழை, செஞ்சோளம், செங்காந்தள் விதை, திருநெல்வேலி அவுரி ஆகிய வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்கப்படும். இதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு.

உணவு பாதுகாப்பினை உணவு மானியத்துக்கு ரூ.10500 கோடி ஒதுக்கீடு.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel