இந்தியா - ஜப்பான் இடையே கூட்டு ராணுவப் பயிற்சி 2024
India-Japan Joint Military Exercise 2024
TAMIL
இந்தியா - ஜப்பான் இடையே கூட்டு ராணுவப் பயிற்சி 2024 / India-Japan Joint Military Exercise 2024: இந்தியா - ஜப்பான் ராணுவம் இடையேயான வருடாந்திர கூட்டு ராணுவ ஒத்திகைப் பயிற்சி பிப்.25ல் தொடங்கியது. ராஜஸ்தானின் மஹாஜன் மைதானத்தில் 2 வாரம் நடைபெறும் இந்த ராணுவப் பயிற்சியில், இரு நாடுகளிருந்தும் 40 வீரர்கள் வீதம் மொத்தம் 80 வீரர்கள் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா - ஜப்பான் ஒத்துழைப்பின் ஒருபகுதியாக இந்த ராணுவப் பயிற்சி ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை ஜப்பானில் நடைபெற்ற இந்த ஒத்திகைப் பயிற்சி இம்முறை இந்தியாவில் நடைபெறுகிறது.
இருநாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்நிகழ்வின் ஒருபகுதியாக, ராணுவ ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ENGLISH
India-Japan Joint Military Exercise 2024: The annual joint military exercise between India and Japan began on February 25. A total of 80 soldiers, 40 soldiers each from both the countries, are participating in the 2-week military exercise at the Mahajan Maidan in Rajasthan.
This military exercise is conducted every year as part of India-Japan cooperation. Last time this rehearsal was held in Japan, this time it is being held in India.
The main objective of this exercise is to improve military cooperation between the two countries. An exhibition of military weapons and equipment will also be held as part of the event.
0 Comments