புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வுகளில் ஒன்றான பாரத் டெக்ஸ் 2024-ஐ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.
பாரத் டெக்ஸ் 2024 பிப்ரவரி 26-29 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 11 ஜவுளி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்களின் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு அரசால் ஆதரிக்கப்படும், பாரத் டெக்ஸ் 2024 வர்த்தகம், முதலீடு என்ற இரட்டை தூண்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.
இது நீடித்த தன்மையில் அதிக கவனம் செலுத்துகிறது. நான்கு நாள் நிகழ்வில் 65க்கும் மேற்பட்ட அமர்வுகள் இடம்பெற்றுள்ள. 100-க்கும் மேற்பட்ட உலகளாவிய குழு உறுப்பினர்கள் துறை எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கின்றனர்.
நீடித்தத்தன்மை மற்றும் சுற்றறிக்கை, இந்திய ஜவுளி பாரம்பரியம், நீடித்தத்தன்மை மற்றும் உலகளாவிய வடிவமைப்புகள் போன்ற பல்வேறு கருப்பொருள்களில் அலங்கார விளக்கக்காட்சிகள் ஆகியவற்றையும் இது கொண்டுள்ளது.
3,500-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட வாங்குபவர்கள் மற்றும் 40,000-க்கும் மேற்பட்ட வணிக பார்வையாளர்கள், ஜவுளித்துறை மாணவர்கள், நெசவாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் ஜவுளித் தொழிலாளர்கள் தவிர, கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பாரத் டெக்ஸ் 2024-ல் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டின் போது 50-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஜவுளித் துறையில் முதலீடு, வர்த்தகத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்சார்பு இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த பிரதமரின் பார்வையை முன்னெடுத்துச் செல்வதில் இது மற்றொரு முக்கிய படியாகும்.
0 Comments