Recent Post

6/recent/ticker-posts

காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்க காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாடு 2024-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார் / Prime Minister launches Commonwealth Legal Education Association Commonwealth Solicitors and Chief Legal Advisers Conference 2024

பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்தின் – காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாடு 2024-ஐ தொடங்கி வைத்தார்.

"நீதி வழங்குவதில் எல்லை தாண்டிய சவால்கள்" என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில், நீதித்துறை மாற்றம் மற்றும் சட்ட நடைமுறையின் நெறிமுறை பரிமாணங்கள் போன்ற சட்டம் மற்றும் நீதி, நிர்வாக பொறுப்பு; மற்றும் நவீன கால சட்டக் கல்வியை மறுபரிசீலனை செய்தல் தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்த மாநாட்டில் ஆசிய-பசிபிக், ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளை உள்ளடக்கிய நாடுகளின் சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கலந்துரையாடலுக்கான ஒரு மன்றத்தை வழங்குவதன் மூலம் இந்த மாநாடு ஒரு தனித்துவமான தளமாக செயல்படுகிறது.

சட்டக் கல்வி மற்றும் நாடுகடந்த நீதி வழங்கலில் உள்ள சவால்களை எதிர்கொள்ள ஒரு விரிவான திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்களைக் கொண்ட வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்யேக வட்ட மேசை மாநாடும் இதில் அடங்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel