ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான திரு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 14 அன்று துபாயில் நடைபெற்ற உலக அரசுகளின் உச்சி மாநாட்டில் கௌரவ விருந்தினராக பங்கேற்றார்.
எதிர்கால அரசுகளை வடிவமைத்தல்" என்ற இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளில் அவர் சிறப்புரையாற்றினார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற உலக அரசுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்றார்.
இந்த முறை நடைபெற்ற உச்சி மாநாட்டில் 10 நாடுகளின் அதிபர்கள், 10 நாடுகளின் பிரதமர்கள் உட்பட 20 உலகத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
0 Comments