நாட்டின் மொத்த விலைக் குறியீட்டெண்ணின் அடிப்படையிலான வருடாந்திர பணவீக்க விகிதம் 2024 ஜனவரி மாதத்தில் (2023 ஜனவரிக்கு மேல்) 0.27%-ஆக இருந்தது.
2024 ஜனவரியில் நேர்மறையான பணவீக்க விகிதத்திற்கு உணவுப் பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், பிற உற்பத்தி, கனிமங்கள், பிற போக்குவரத்து உபகரணங்கள் போன்றவற்றின் விலை அதிகரிப்பே முதன்மையான காரணமாகும்.
முதன்மையான பொருட்கள் (22.62%) பெரிய குழுமத்திற்கான குறியீடு 2023 டிசம்பர், மாதத்தில் 182.9 (தற்காலிகமானது) ஆக இருந்த நிலையில் 2024 ஜனவரியில் 1.04% குறைந்து 181.0 (தற்காலிகமானது) ஆக இருந்தது.
கனிமங்களின் விலை (0.93%) 2023 டிசம்பருடன் ஒப்பிடும்போது 2024 ஜனவரியில் அதிகரித்துள்ளது. கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (-0.33%), உணவு அல்லாத பொருட்கள் (-0.49%) மற்றும் உணவுப் பொருட்கள் (-1.36%) ஆகியவற்றின் விலைகள் 2023 டிசம்பருடன் ஒப்பிடும்போது 2024 ஜனவரியில் குறைந்துள்ளன.
எரிபொருள் மற்றும் மின்சாரம் (எடை 13.15%) முக்கிய குழுமத்திற்கான குறியீடு 2023 டிசம்பர் மாதத்தில் 154.2 (தற்காலிகமானது) இருந்தது. 2024 ஜனவரியில் 0.39% அதிகரித்து 154.8 (தற்காலிகமானது) ஆக அதிகரித்தது.
2023 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 2024 ஜனவரியில் மின்சாரத்தின் விலை (3.30%) அதிகரித்துள்ளது. நிலக்கரி (-0.37%) மற்றும் கனிம எண்ணெய்களின் (-0.56%) விலைகள் 2023 டிசம்பருடன் ஒப்பிடும்போது 2024 ஜனவரியில் குறைந்துள்ளன.
0 Comments