வீட்டு மாடிகளில் சூரிய மின்தகடுகளைப் பொருத்தியுள்ள ஒரு கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் ‘பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தை’ பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
நாட்டின் ஒரு கோடி வீடுகளின் மாடிகளில் சூரிய மின்சக்தி தகடுகளைப் பொருத்தி 40,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் பிரதமரின் சூரியோதய திட்டத்தை அயோத்தி ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை நாளான கடந்த மாதம் 22-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருந்தாா்.
இத்திட்டத்தில் குடும்பத்தினருக்கு மத்திய அரசு மானிமும் வழங்கவுள்ளது. அதேபோல், குடும்பங்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் ‘பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தை’ பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிலையான வளா்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காக, பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தை தொடங்குகிறோம். ரூ.75,000 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில் மாதந்தோறும் ஒரு கோடி குடும்பங்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
வீடுகளிள் சூரிய மின்சக்தி உற்பத்தி அமைப்பை நிறுவியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும் மானியங்கள் முதல் அதிக வரிச் சலுகை கடன்கள்வரை மக்களுக்கு எவ்வித நிதிச்சுமையும் இல்லாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்கிறது எனக் குறிப்பிட்டிருந்தாா்.
0 Comments