"வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த சத்தீஸ்கர்" நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ரூ .34,400 கோடிக்கும் அதிக மதிப்பிலான சாலைகள், ரயில்வே, நிலக்கரி, மின்சாரம் மற்றும் சூரிய சக்தி உள்ளிட்ட பல முக்கிய துறைகளின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார் மற்றும் அடிக்கல் நாட்டினார்.
என்டிபிசி-யின் லாரா சூப்பர் அனல் மின் திட்டம், அலகு-1ஐ (2x800 மெகாவாட்) நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் என்டிபிசியின் லாரா சூப்பர் அனல் மின் திட்டத்தின் alagu-2க்கு (2x800 மெகாவாட்) அடிக்கல் நாட்டினார்.
தென்மேற்கு நிலக்கரி வயல் நிறுவனத்தின் ரூ.600 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட மூன்று முக்கிய இணைப்பு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.
0 Comments