தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்கள் வரை சூரிய வெளிச்சம் கிடைக்கிறது. இதனால், தனியார் நிறுவனங்கள் நிலத்தில் அதிக திறன் உடைய சூரியசக்தி மின் நிலையம் அமைக்கின்றன.
பெரிய கட்டடங்களில் குறைந்த திறனில் கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கவும் ஆர்வம் காட்டுகின்றன. கடந்த ஜனவரி நிலவரப்படி, ஒட்டுமொத்த சூரியசக்தி மின் நிலையம் நிறுவுதிறனில் ராஜஸ்தான், 18,795 மெகாவாட்டுடன் முதலிடத்தில் உள்ளது.
10,548 மெகாவாட்டுடன் குஜராத் இரண்டாவது இடத்திலும்; கர்நாடகா, 9,463 மெகாவாட்டுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. தமிழகம், 7,426 மெகாவாட் திறனுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
0 Comments