ரூ.41,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான சுமார் 2,000 ரயில்வே கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். 500 ரயில் நிலையங்கள், 1500 பிற இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ரயில்வே நிகழ்வுடன் இணைந்தனர்.
1500 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ள இந்த சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு சுமார் ரூ.21,520 கோடியாகும்.
இந்தத் திட்டங்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும், பாதுகாப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்தும், ரயில் பயணத்தின் திறனை மேம்படுத்தும்.
0 Comments