பல்கேரியாவில் 'ஸ்டிரான்ட்ஜா' சர்வதேச குத்துச்சண்டை 75வது சீசன் நடந்தது. ஆண்களுக்கான 51 கிலோ பைனலில் இந்தியாவின் அமித் பங்கல், கஜகஸ்தானின் சஞ்சார் தாஷ்கன்பே மோதினர். அபாரமாக ஆடிய அமித் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான 57 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சச்சின், உஸ்பெகிஸ்தானின் ஷக்சோட் முசாபரோவ் மோதினர். இதில் சச்சின் 5-0 என வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றார்.
பெண்களுக்கான 50 கிலோ பிரிவு பைனலில் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் நிகாத் ஜரீன், உஸ்பெகிஸ்தானின் சபினாவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.
மற்ற எடைப்பிரிவு பைனலில் ஏமாற்றிய இந்தியாவின் அருந்ததி சவுத்தரி (66 கிலோ), பருன் சிங் ஷகோல்ஷெம் (48 கிலோ), ரஜத் (67 கிலோ) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.
இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கம் கிடைத்தன. ஆகாஷ், நவீன் தலா ஒரு வெண்கலம் வென்றனர்.
0 Comments