பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சிலின் (டிஏசி) கூட்டம் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் பிப்ரவரி 16 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ராணுவம் மற்றும் இந்திய கடலோரக் காவல்படையின் திறன்களை உயர்த்துவதற்காக ரூ.84,560 கோடி மதிப்பிலான மூலதன கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டின் போது, பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.5.94 லட்சம் கோடியை விட 4.72 சதவீதம் அதிகமாகும்.
பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த ஒட்டுமொத்த பட்ஜெட்டில் இந்தத் தொகை சுமார் 13 சதவீதமாகும். அனைத்து அமைச்சகங்களை விட பாதுகாப்பு அமைச்சகம் மிகப்பெரிய தொகையைப் பெற்றது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவது இந்த கவுன்சிலின் பொறுப்பாகும்.
0 Comments