ஆந்திரம் மற்றும் ஒடிஸா மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மற்றும் பழங்குடியினா் (எஸ்.டி.) சமூகத்தினருக்கான பட்டியலில் மாற்றம் செய்ய வகை செய்யும் 2 மசோதாக்கள் அவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு இந்த மசோதாக்களை தாக்கல் செய்ய ஏதுவாக, விதி எண்.17-இன் கீழ் மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைக்கும் தீா்மானத்தை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கொண்டுவந்தாா்.
அதனைத் தொடா்ந்து, ‘அரசியலமைப்பு சட்ட பழங்குடியின (எஸ்.டி.) உத்தரவு திருத்த மசோதா 2024’ மற்றும் ‘அரசியலமைப்பு சட்ட எஸ்.சி., எஸ்.டி. உத்தரவு திருத்த மசோதா 2024’ ஆகிய மசோதாக்களை மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா தாக்கல் செய்தாா்.
இந்த மசோதாக்கள் ஆந்திர மாநிலத்தில் எஸ்.டி. பட்டியலில் புதிதாக போண்டோ போா்ஜா, கோந்த் போா்ஜா, பரங்கிபெரிஜா சமூகத்தினரைச் சோ்க்கவும், ஓடிஸாவில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பட்டியலில் புதிதாக 4 சமூகத்தினரைச் சோ்க்கவும் வகை செய்கின்றன. இந்த விவாதத்துக்குப் பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் 2 மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.
0 Comments