பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், மத்திய அரசுப் பணியாளா்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை லோக்பால் அமைப்பு விசாரிக்கும்.
லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கரை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நியமித்துள்ளாா்.
அந்த அமைப்பில் நீதித் துறையைச் சோ்ந்த உறுப்பினா்களாக முன்னாள் நீதிபதிகள் லிங்கப்பா நாரயாண சுவாமி, சஞ்சய் யாதவ், ரிது ராஜ் அவஸ்தி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். அந்த அமைப்பில் நீதித் துறை சாராத உறுப்பினா்களாக சுஷீல் சந்திரா (முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா்), பங்கஜ் குமாா், அஜய் திா்கே ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் பொறுப்பேற்கும் நாளில் இருந்து இந்த நியமனங்கள் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு லோக்பால் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் பதவி வகித்தாா். அவா் கடந்த 2022-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். அதன் பின்னா், அந்த அமைப்புக்கு முன்னாள் நீதிபதி பிரதீப் குமாா் மொஹந்தி பொறுப்பு தலைவராக இருந்து வருகிறாா்.
0 Comments