Recent Post

6/recent/ticker-posts

ஜார்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்பு / Chambhai Soren sworn in as Chief Minister of Jharkhand

ஜார்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்பு / Chambhai Soren sworn in as Chief Minister of Jharkhand

நிலம் தொடர்பான முறைகேடான பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இரவில் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, நேற்று ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க சம்பாய் சோரன் உரிமை கோரினார். இந்நிலையில், ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க சம்பாய் சோரனுக்கு அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். 

இந்த நிலையில், சம்பாய் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இன்னும் 10 நாட்களுக்குள் சம்பாய் சோரன் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கேட்டு கொண்டுள்ளார்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel