ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினைப் பெறும் முதல் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் எனும் பெருமையை இளம் வேகப் பந்துவீச்சாளர் ஷமர் ஜோசப் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால் அவருக்கு இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது.
அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் ஷமர் ஜோசப். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ய தனது அபார பந்துவீச்சினால் உதவினார்
0 Comments