உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் சேவைத்துறை தொடர்பான ஒப்பந்தம் நிறைவேற்றம் / Implementation of agreement on services sector at World Trade Organization meeting
TAMIL
உலக வர்த்தக அமைப்பின் (WTO) அமைச்சர்கள் மாநாட்டின் (World Trade Organization Ministerial Conference) முதல் நாளிலேயே இந்தியாவின் முன்னெடுப்பு மிகப்பெரிய பலனைக் கொடுத்துள்ளது.
சேவைத் துறையில் வணிகத்தை எளிதாக்குவதற்கு உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. சேவைத் துறை வர்த்தகம் தொடர்பான சிக்கல்களுக்கு ஒரு தீர்வு ஏற்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இனிமேல், சேவைத் துறையில் புதிய விதிகள் உருவாக்கப்படும் என்று உலக வர்த்தக அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. உலகின் 71 நாடுகள் இந்த புதிய ஒப்பந்தத்தில் இணைகின்றன.
சேவைத் துறையில் மைல்கல் என்று பார்க்கப்படும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவிற்கு நல்ல ஊக்கம் கிடைக்கும். இதற்குக் காரணம், இந்தியாவின் சேவைத் துறை வணிகம் உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது.
ENGLISH
India's initiative on the first day of the World Trade Organization (WTO) Ministerial Conference has yielded huge results. An agreement has been reached among member countries of the World Trade Organization to facilitate trade in the services sector.
There is a solution to the problems related to trade in services sector. Based on this, henceforth, new rules will be developed in the service sector, according to a report published by the World Trade Organization. 71 countries of the world join this new agreement.
The agreement, which is seen as a landmark in the services sector, will give India a good boost. This is because India's service sector business is spread across many countries in the world.
0 Comments