Recent Post

6/recent/ticker-posts

ஜே.பி. நட்டா, எல். முருகன் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு / JP Natta, L. Murugan elected as Rajya Sabha members

ஜே.பி. நட்டா, எல். முருகன் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு / JP Natta, L. Murugan elected as Rajya Sabha members

மாநிலங்களவைத் தோதலில் போட்டியிட ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, குஜராத்தில் இருந்து பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய பிரதேசத்தில் இருந்து மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோா் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து இருந்தனர்.

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மாநிலங்களவைத் தோதலில் போட்டியிட குஜராத் மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் மாநிலங்களவை தோதலில் மத்திய பிரதேசத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தாா். மத்திய இணையமைச்சா் எல். முருகன் இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இரண்டாவது முறையாக மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக மத்திய இணையமைச்சர் எல். முருகன் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார் மற்றும் குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக ஜே.பி. நட்டா இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel