விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குவதற்கு வசதியாக, சேமிப்பு கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம், பஞ்சாப் & சிந்து வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
05.02.2024 அன்று பஞ்சாப் & சிந்து வங்கியின் தலைமை அலுவலகத்தில், சேமிப்புக் கிடங்கு ஆணையத்தின் தலைவர் திரு டி.கே.மனோஜ் குமார், பஞ்சாப் & சிந்து வங்கியின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு ஸ்வரூப் குமார் சாஹா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் & சிந்து வங்கியின் செயல் இயக்குநர்கள் டாக்டர் ராம் ஜாஸ் யாதவ், திரு ரவி மெஹ்ரா, சேமிப்புக் கிடங்கு ஆணையத்தின் துணை இயக்குநர் திரு நவீன் பரோலியா, உதவி இயக்குநர் திரு சாய் பிரதீப் கோபிஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மின்னணு மாற்றத்தக்க சேமிப்புகிடங்கு ரசீதுகளுக்கு எதிராக நிதி திரட்டுவதற்கான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவில் வேளாண் பிணைய நிதியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர, வைப்புத் தொகையாளர்களுக்கு நன்மைகள் குறித்த தகவல்களை வழங்குவதை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பஞ்சாப் & சிந்து வங்கி மின்னணு மாற்றத்தக்க சேமிப்புகிடங்கு ரசீதுகளுக்கு ஈடாக எந்தவித அடமானமும் இல்லாமல், கவர்ச்சிகரமான வட்டி விகிதத்துடன் கடன்களை வழங்குகிறது. வேளாண் துறையில் ரூ.75 லட்சம் வரையிலும், இதர பிரிவினருக்கு ரூ.5 கோடி வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.
0 Comments