இந்தியாவில் சிறுத்தைகளின் கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் 2024 பிப்ரவரி 29 அன்று புதுதில்லியில் வெளியிட்டார்.
மாநில வனத்துறையுடன் இணைந்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், இந்திய வனவிலங்குகள் நிறுவனம் சிறுத்தைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியது.
இதன் மூலம் இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 13,874- ஆகக் கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 3907 சிறுத்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிராவில் 1985 சிறுத்தைகளும், கர்நாடகாவில் 1879 சிறுத்தைகளும், தமிழ்நாட்டில் 1070 சிறுத்தைகளும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
0 Comments