இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆக்கிரமிப்புகள் வாழும் மேற்குகரை பகுதியில் உள்ள பாலஸ்தீன பகுதிகளை பாலஸ்தீன நிர்வாகம் என்றழைக்கப்படும் பாலஸ்தீன பிரதமர் முஹம்மது ஷ்டய்யே தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்தது.
இந்நிலையில், பாலஸ்தீனத்தில் தனது தலைமையிலான அரசை கலைத்துவிட்டு புதிய அரசு பொறுப்பேற்க பிரதமர் முஹம்மது ஷ்டய்யே விருப்பம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸிடம் தனது ராஜிநாமா கடிதத்தை அவர் இன்று(பிப்.26) சமர்ப்பித்துள்ளார்.
காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், காஸாவில் போர் முடிவுற்ற பின், அதற்குப் பிந்தைய சூழலில் பாலஸ்தீனத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைவதே சிறந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த பாலஸ்தீன நிர்வாகத்தின் பிரதமராக முஹம்மது ஷ்டய்யே கடந்த 2019-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். இந்நிலையில், அமெரிக்காவின் கடும் அழுத்தம் காரணமாகவே பாலஸ்தீன பிரதமர் முஹம்மது ஷ்டய்யே இந்த முடிவை எடுத்திருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
முஹம்மது ஷ்டய்யே தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகியிருப்பதன் மூலம், பாலஸ்தீனத்தில் அமெரிக்க ஆதரவுடன் புதிய அரசு அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
0 Comments