ஒடிசாவில் ரூ.68,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த 2021ல் சம்பல்பூரில் உள்ள ஐஐஎம் வளாகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில், ரூ.400 கோடி மதிப்புள்ள வளாகத்தை இன்று திறந்துவைத்தார். மேலும் மின்சாரம், சாலை மற்றும் ரயில்வே போன்ற பல்வேறு துறைகளில் பல உள்கட்டமைப்பு திட்டங்களை வெளியிட்டார்.
பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்தும் புரி-சோனேபூர் இடையேயான வாராந்திர விரைவு ரயிலையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மேலும் ஜார்சுகுடா தலைமை அஞ்சல் அலுவலக பாரம்பரிய கட்டடத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆளுநர் ரகுபர் தாஸ், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments