பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றிருந்தார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி அமீரகம் சென்றடைந்தார். அங்கே அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அங்கு அபுதாபியின் முதல் இந்து கோவிலைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா என்ற அமைப்பால் இந்த கோவில் ஆனது கட்டப்பட்டது.
0 Comments