பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இது குறித்த ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார்.
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எழுதியிருக்கும் ராஜிநாமா கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காகவும், தனிப்பட்ட பொறுப்புகளை கவனிக்கவும் பஞ்சாப் ஆளுநர் பதவியையும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் பொறுபாளர் பதவியையும் ராஜிநாமா செய்வதாகவும், தயவுகூர்ந்து, தனது ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ளும்படியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்பட பஞ்சாப் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கடும் மோதல் நீடித்துவந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக ஆளுநராக நான்கு ஆண்டுகள் பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோஹித், கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பஞ்சாப் ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார்.
0 Comments