Recent Post

6/recent/ticker-posts

ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானங்கள் - சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம் / Resolutions against One Country One Election, Constituency Reorganization - Unanimous passage in the Assembly

தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. மூன்றாவது நாளாக இன்று நடைபெறும் அமர்வில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்ற இரண்டு தனித் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்மொழிந்து உரையாற்றினார்.

பின்னர் 'ஒரே நாடு ஒரே தேர்தல்', தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றை கைவிட வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த இரண்டு அரசினர் தனித் தீர்மானங்கள் மீது சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து நடைபெற்ற குரல் வாக்கெடுப்பின் அடிப்படையில், ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel