மணிப்பூர் வன்முறைக்கு பெரும் காரணமாக இருந்த உயர்நீதிமன்றம் உத்தரவால், மாநிலத்தில் நடந்த சாதிய வன்முறையில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு மணிப்பூர் உயர் நீதிமன்றம், மெய்தி சமூகத்தை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் (ST) சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெய்தி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என நாகா மற்றும் குகி பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் வன்முறை வெடித்தது.
மறுபுறம், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மறுஆய்வு மனு விசாரணைக்கு வந்தபோது, தனது தீர்ப்பில் திருத்தம் செய்துள்ளது. அதாவது நீதிமன்றம் தனது உத்தரவின் 17(3)வது பத்தியில் திருத்தம் செய்துள்ளது.
நீதிமன்றங்கள் பட்டியல் பழங்குடியினர் பட்டியலை திருத்தவோ அல்லது மாற்றவோ முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளதை மேற்கோள்காட்டி, மணிப்பூர் உயர் நீதிமன்றம் தனது பழைய தீர்ப்பை திருத்தியது.
கடந்த ஆண்டு பத்தி 17(3)ன் கீழ் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் நீக்கப்பட வேண்டும், எனவே நீக்கப்படுவதாக பெஞ்ச் கூறியது.
0 Comments